Advertisements

நாளை முதல் திரையில் கலக்க வரும் ‘புகழ்’

உதயம் NH4 பட டைரக்டர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ள புகழ் திரைப்படம் நாளை (மார்ச் 18) ரிலீஸாகிறது. வருண் மணியன் தயாரித்துள்ள இப்படத்தை பிரபல ஐங்கரன் நிறுவனம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.

மேலும் ஜெய் ஜோடியாக சுரபி நடித்துள்ள இப்படத்தில் RJ பாலாஜி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் நில மோசடி குறித்த சமுதாய பிரச்சனையை தீவிர அலசுகிறது. மேலும் நீண்ட நாட்களாக ஜெய் எதிர்பார்த்து வரும் கமர்ஷியல் சக்ஸஸ் இதில் அவருக்கு கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Close Menu
%d bloggers like this: